உள்ளூராட்சி தேர்தல் சட்ட விவாதத்துக்கான திகதி அடுத்தவாரம் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் சட்ட விவாதத்துக்கான திகதி அடுத்தவாரம் கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில் நிர்ணயிக்கப்படுமென அமைச்சரவைக்கான சுதந்திரக் கட்சி பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேக்கர நேற்று தெரிவித்தார்.

அண்மையில் நடத்தப்பட்ட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் சட்டத்துக்கான விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து ஒரு குழுவை நியமித்துள்ளனர்.அதற்கமைய 4,200 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டிய இடத்திற்கு 8,400 உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர் என்றும் போட்டியிடவுள்ளோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...