Saturday, April 20, 2024
Home » இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை வரவேற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை வரவேற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

- IORA 23ஆவது அமைச்சர்கள் கூட்டம் இன்று கொழும்பு பில்

by Rizwan Segu Mohideen
October 11, 2023 11:14 am 0 comment

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று அதிகாலை (10) வந்தடைந்த இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வரவேற்றார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 23ஆவது அமைச்சர்கள் (COM) கூட்டம்
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (11) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வமாக வருகை தந்த அமைச்சர் ட்ரெவெலியனயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உத்தியோகபூர்வமாக விமான நிலையத்தில் வரவேற்றார்.

இலங்கையில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைமைத்துவத்திற்கான கூட்டம் ‘பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்தியப் பெருங்கடல் அடையாளத்தை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது.

அத்துடன், இந்த சங்கத்தின் தற்போதைய தலைமைத்துவத்தை வகித்து வரும் பங்களாதேஷ் மக்கள் குடியரசு இரண்டு வருட பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வருட காலப்பகுதிக்கான இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமைப் பொறுப்பை இலங்கையிடயம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஸாதிக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT