லஹிருவுக்கு ஜூலை 05 வரை விளக்கமறியல் (UPDATE) | தினகரன்

லஹிருவுக்கு ஜூலை 05 வரை விளக்கமறியல் (UPDATE)

 
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு வீரசேகரவுக்கு ஜூலை 05 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் (21) சுகாதார அமைச்சின் கட்டடத்திற்குள் அத்து மீறி நுழைந்து அரசாங்க சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை குற்றச்சாட்டு தொடர்பில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு வீரசேகர மற்றம் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் பைஸ்டீன் பைசான் அஹமட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவும் இணைந்து குறித்த இருவரையும் மருதானையில் வைத்து கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
 
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு சற்று முன் கைது
 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொழும்பு, மருதானையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அச்சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று முன்தினம் (21), சைட்டம் (SAITM) தனியார் வைத்திய பல்கலைக்கழகத்திற்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து, அதன் கட்டடம் மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சுகாதார அமைச்சின் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் காரணமாக இடம்பெற்ற சேதம் தொடர்பிலான சேத மதிப்பீட்டு அறிக்கை, அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் இன்றைய தினம் (23) சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...