Friday, April 26, 2024
Home » வனத்துறையின் 3,32000 ஏக்கர் காணிகளை கோடீஸ்வரர்களுக்கு கைமாறி மோசடி

வனத்துறையின் 3,32000 ஏக்கர் காணிகளை கோடீஸ்வரர்களுக்கு கைமாறி மோசடி

சுற்றாடல்துறை பாராளுமன்ற மேற்பார்வை குழு தகவல்

by damith
October 10, 2023 7:30 am 0 comment

நாடளாவிய ரீதியில் வன பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 3,32,000 ஏக்கர் காணிகள் கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் பிரபுக்கள் உள்ளிட்டோர்களுக்கு விவசாயம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு, வன துறைக்கான காணிகள் தன்னிச்சையாக பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அந்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அதேவேளை,2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை யானை – மனித மோதல்களால், 1967 யானைகளும் 667 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமானது இக்காலகட்டங்களில்,யானை – மனித மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக 12 கோடிக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளது.அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை 273 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவின் தலைமையில், நேற்றுமுன்தினம் பாராளுமன்ற கட்டடத்தில் இடம் பெற்றுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT