Friday, March 29, 2024
Home » தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

by damith
October 10, 2023 7:20 am 0 comment

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய நேற்று திங்கட்கிழமை (09) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை 155,400 வாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த புதன்கிழமை ரூபா 152,200 வாகக் காணப்பட்டது.

இதேவேளை, கடந்த வாரம் புதன்கிழமை வரையில் 164,500, ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை தற்போது, 168,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT