இரட்டை ஜடை போடாத காரணத்துக்குக்காக தோப்புக்கரணம் போட வைத்த மாணவி மருத்துவமனையில்

அகமதாபாத்தில் இரட்டை ஜடை போடாத காரணத்துக்குக்காக 5வது படிக்கும் மாணவிகளைத் தோப்புக்கரணம் போட வைத்ததில் ஒரு மாணவி கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தண்டனை சட்டத்தின் 83-வது பிரிவின்படி 5 வயதுக்கு மேல் - 12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் செய்யும் தவறுகள் குற்றமாகாது. சிறுவர்கள் அறியாமல் செய்யும் குற்றத்துக்கு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் பாடசாலைகளில் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே அகமதாபாத்தில் 5-வது படிக்கும் மாணவிகளைக் கடுமையாகத் தண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கிறது லலிதா கிரீன் லான்ஸ் பாடசாலை. இந்தப் பாடசாலையில் நேற்று சில மாணவிகள் இரட்டை ஜடை போடாமல் வந்துள்ளனர். அதைக் கண்டிக்கும் விதமாக மாணவிகளைச் சுமார் 40 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு மாணவிக்குக் கடுமையான கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாடசாலை நிர்வாகம்மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...