SLT “Zero One Awards Night” டிஜிட்டல் விருது விழா மே 30 இல் | தினகரன்

SLT “Zero One Awards Night” டிஜிட்டல் விருது விழா மே 30 இல்

 
ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் Zero One Awards (SLT 01Awards) நிகழ்வு விரைவில் வருகிறது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே 30 அன்று இரவு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 
சிறந்த பெறுபேறுகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் டிஜிட்டல் மேடைகளைப் பயன்படுத்தி புதுமை உருவாக்கங்களைப் படைப்பதற்கு சகல இலங்கையர்களையும் ஊக்குவிப்பதே SLT Zero One விருதுகள் வழங்கப்படும் நோக்கமாகும்.
 
இலங்கையில் டிஜிட்டல் மேன்மையை இனங்காண்பதற்காக இந்த விருதுகள் 27 செப்டெம்பர் 2016 இல், தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் ஃபெனாண்டோவினால் ஆரம்பிக்கப்பட்டது. 
 
டிஜிட்டல் புதுமை உருவாக்கங்களைப் படைப்போரையும் நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தி இனங்காணும் ஸ்ரீலரெ இன் இந்த முயற்சியை அமைச்சர் பாராட்டினார்.
 
“இலங்கை முழுவதுமுள்ள விண்ணப்பதாரிகள் தமது டிஜிட்டல் சந்தைகளை பிரச்சாரம் செய்வதற்கு ஏற்ற தளமாக இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி நான் 
பெருமைப்படுகிறேன். இதன் மூலம் உள்நாட்டு திறமைசாலிகளின் டிஜிட்டல் திறமைகள் மேம்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். 
 
டிஜிட்டல் புதுமை உருவாக்கங்கள் மூலம் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புள்ளது” என்று அமைச்சர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.
 
இந்த விருதுகள் 3 பிரிவுகளுக்குள் அமையும் : பிரதான பிரிவுக்கான விருதுகள், வாணாள் விருதுகள், உப பிரிவுகளுக்கான விருதுகள். இதில் பிரதான பிரிவுகள் இன்னும் பல உப பிரிவுகளாக, தனிப்பட்டவர்கள் – நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...