Friday, March 29, 2024
Home » நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தி பகுதிகளில் பிற்பகலில் மழை

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தி பகுதிகளில் பிற்பகலில் மழை

- சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

by Rizwan Segu Mohideen
October 8, 2023 9:28 am 0 comment

– சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் குணாநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT