Tuesday, March 19, 2024
Home » Coca-Cola Sri Lanka தனது ‘Adopt A Beach’ திட்டத்தை மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுத்துள்ளது

Coca-Cola Sri Lanka தனது ‘Adopt A Beach’ திட்டத்தை மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுத்துள்ளது

- சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தை இளம் ஊடகத்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடனும் இணைந்து கொண்டாடியது

by Rizwan Segu Mohideen
September 25, 2023 3:28 pm 0 comment

Coca-Cola Sri Lanka நிறுவனம், தனது Adopt A Beach திட்டத்தை மூன்றாவது ஆண்டாக இம்முறையும் முன்னெடுத்து, இலங்கையின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் தனது பணியைத் தொடர்கிறது. இந்த உற்சாகமூட்டும் நடவடிக்கை, 2023 செப்டம்பர் 16 ஆம் திகதி சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாடுவதோடு, கடற்கரை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Coca-Cola Sri Lanka நிறுவனம் மற்றும் Clean Ocean Force இடையேயான ஒத்துழைப்பைக் கொண்டாடும் வகையில், மட்டக்குளி Crow Island கடற்கரையில் பிரத்யேக கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநரும் இலங்கை விமானப்படையின் தளபதியுமான கௌரவ ரொஷான் குணதிலக்க மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பிறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு, கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், கழிவு நிர்வகிப்பு அதிகார சபை மற்றும் Crow Island கடற்கரை முகாமையாளர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும், நமது நாட்டின் இளைஞர்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கடற்கரைப் பகுதிகளை உருவாக்குவதில் வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தும் விதமாக, இந்த நிகழ்வில் ஊடகத் துறையைச் சேர்ந்த இளம் திறமையாளர்கள் மற்றும் Clean Ocean Force, Clean Ocean Force Youth Club of the Ocean’s University, Clean Ocean Force Youth Club in Negombo, Rotaract Club Colombo Regent, Shri Vimukthi Youth Association, International Schools மற்றும் Adfactors Public Relations Lanka ஆகியவற்றைச் சேர்ந்த இளம் தன்னார்வலர்கள் அணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Adopt A Beach திட்டம், Clean Ocean Force (COF) என்ற இலாப நோக்கற்ற அமைப்புடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கையின் கடற்கரை சுத்தம் செய்யும் முயற்சிகளில் புதிய அளவுகோல்களை நிறுவியுள்ளது. Coca-Cola Sri Lanka நிறுவனம், Crow Island கடற்கரையை சுத்தம் செய்து பராமரிப்பதற்கான COF-ன் முயற்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் உள்ளுராட்சிமன்றம், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, சுற்றுச்சூழல் விவகாரங்கள் அமைச்சும், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சும், சுற்றுலா மேல் மாகாணம்இலங்கை, கழிவு நிர்வகிப்பு அதிகார சபை மேல் மாகாணம், இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, சமுர்த்தி அதிகார சபை, Crow Island நிர்வாகம் மற்றும் Crow Island கடற்கரை சங்கம் ஆகியவை உட்பட பல தரப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த Adopt A Beach திட்டம் தினசரி சுத்தம் செய்யும் முயற்சியாக செயல்படுகிறது. இது நிலையான மற்றும் தனித்துவமான முயற்சியாகும். அவ்வப்போது நடைபெறும் சுத்தம் செய்யும் முயற்சிகளில் இருந்து இது வேறுபடுகிறது, ஏனெனில் இது அந்த பகுதியின் தூய்மையை தொடர்ந்து கவனித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த திட்டம் ஆளுநரின் அலுவலகம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட பணிக்குழுவினரால் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம், இந்த திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான நோக்கங்களுக்கு மேலதிகமாக, இந்த திட்டம் சமூக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கழிவு சேகரிப்பு மூலம் மாற்று வருமான சந்தர்ப்பத்தை உருவாக்குவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் வசதி குறைந்த சமூகங்களை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல குடும்பங்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் இதன் இருமடங்கு முக்கியத்துவத்தை இது திறம்பட எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் கடற்கரை பாதுகாப்புக்கான இவ்வளவு பேராவல் மிக்க மற்றும் நிலையான உறுதியை ஒரு நிறுவனம் முதன்முறையாக வழிநடத்தி தொடர்ந்து மேற்கொள்வதையும் இது குறிக்கிறது.

Coca-Cola Sri Lanka மற்றும் மாலத்தீவுகளின் முகாமைத்துவப் பணிப்பாளர் பங்கஜ் சின்ஹா, இந்த முயற்சியை சாத்தியமாக்கிய Clean Ocean Force மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். “நமது கடலோரப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் Coca-Colaவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக எங்களின் ‘Adopt A Beach’ திட்டத்தை விரிவுபடுத்துவது தூய்மையான, நிலையான சூழலை உருவாக்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். Clean Ocean Force உடனான எங்கள் கூட்டாண்மை, ஒரு அழகிய கடற்கரைப் பகுதிக்கான எங்கள் தூரநோக்கு உட்பார்வையை பிரதிபலிக்கிறது, மேலும் இந்த மாற்றமடையும் பயணத்தை வழிநடத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT