Saturday, April 20, 2024
Home » காப்புறுதித் தீர்வுக்காக வலுவான கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ள அமானா தகாஃபுல் – சிபிசி ஃபினான்ஸ்

காப்புறுதித் தீர்வுக்காக வலுவான கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ள அமானா தகாஃபுல் – சிபிசி ஃபினான்ஸ்

by Rizwan Segu Mohideen
September 27, 2023 3:07 pm 0 comment

வாகன உரிமையாளர்களுக்கான காப்புறுதிச் சேவைகளை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் பிஎல்சி (Amana Takaful Insurance PLC) மற்றும் சிபிசி ஃபினான்ஸ் லிமிட்டெட் (CBC Finance Limited) ஆகியவை விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த மூலோபாய கூட்டணியானது, கொமர்ஷல் வங்கியின் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட ஒரு துணை நிறுவனமான சிபிசி ஃபினான்ஸிற்கான விருப்பத்திற்குரிய காப்புறுதிக் கூட்டாளராக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸை நிலைநிறுத்துகிறது.

இந்த பிரத்தியேக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதானது, சிபிசி ஃபினான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடைய காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதற்கான அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் உறுதிப்பாட்டை குறிக்கிறது. இது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட வாகன உரிமையாளர்களுக்கு கட்டுபடியான கட்டணங்களில், முழுமையான காப்புறுதி மற்றும் தங்குதடையற்ற சேவைகளை உறுதிசெய்து பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் மற்றும் சிபிசி ஃபினான்ஸ் ஆகியவற்றுக்கு இடையே பரவலான ஒத்துழைப்பை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தி, வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்த வழிகோலும். மேலும், இந்த ஒப்பந்தமானது சிபிசி ஃபினான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. 

அமானா தக்காஃபுல் இன்சூரன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசன் காசிம் அவர்கள், இந்த புதிய பிரத்தியேக கூட்டாண்மை குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகையில், “சிபிசி ஃபினான்ஸ் உடன் இணைந்து அவர்களுடைய மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு முழுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மூலோபாய கூட்டணி இலங்கை முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த பெறுமதியை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்புடன் முழுமையாக இணைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார். 

சிபிசி ஃபினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் திஸாநாயக்க அவர்கள் குறிப்பிடுகையில், “இலங்கை முழுவதும் உள்ள வாகனங்களுக்கு வலுவான காப்புறுதியை உறுதி செய்வதில் இந்த கூட்டாண்மை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் வலுவான நிதி நிலை மற்றும் தலைசிறந்த தயாரிப்பு வழங்கல், சிபிசியின் விரிவான எட்டுகையுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு உயர்மட்ட காப்புறுதித் தீர்வுகள் மற்றும் நிகரற்ற வசதிகளுடன் அவர்களை வலுவூட்டும்,” என்று குறிப்பிட்டார். 

நிதிச் சேவைகள் துறையில் இந்த இரு முன்னணி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வணிக சமூகம் மற்றும் பொது மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அவற்றின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. சவாலான சந்தை சூழலுக்கு மத்தியில், இந்த கூட்டாண்மையானது அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் நெகிழ்திறன் மற்றும் நம்பகமான காப்புறுதித் திட்டங்களை வழங்குவதில் உள்ள உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் விருப்பமான தெரிவாக அமைகிறது.

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் (Amana Takaful Insurance) தொடர்பான விபரங்கள்

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் தொழில்சார் நெறிமுறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான ஒரு எண்ணக்கருவுடன் இலங்கையில் ஒரு முன்னணி காப்புறுதி நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் ஒரு பொது நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள முழுமையான காப்புறுதி நிறுவனமாக மாறியது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் இலங்கை முழுவதும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு 35 இற்கும் மேற்பட்ட கிளைகளுடன் புவியியல்ரீதியான தனது அடிச்சுவட்டை விரிவுபடுத்தியுள்ளது. ISO 9001 தரச்சான்று அங்கீகாரம் பெற்ற நிறுவனமான அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், 2005 ஆம் ஆண்டு முதல் மாலைதீவில் தனது வெளிநாட்டு செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. இது ஒரு சுயாதீனமான பொது நிறுவனமாக அங்கு கூட்டிணைக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் மாலைதீவு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் முழுமையான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி தீர்வுகளை வழங்கி வருவதுடன், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த மருத்துவ சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களையும் வழங்கி வருகின்றது.

சிபிசி ஃபினான்ஸ் லிமிட்டெட் (CBC Finance Limited) தொடர்பான விபரங்கள்

சிபிசி ஃபினான்ஸ் லிமிட்டெட் என்பது இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்றுள்ள, தொடர்ந்து 10 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த 1,000 வங்கிகளின் மதிப்புமிக்க பட்டியலில் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்த வங்கியான கொமர்ஷல் வங்கியின் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட ஒரு துணை நிறுவனமாகும். முன்பு செரண்டிப் ஃபினான்ஸ் என்ற பெயரைக் கொண்டிருந்த சிபிசி ஃபினான்ஸ், 2014 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அங்கீகாரத்துடன் 1987 ஆம் ஆண்டு இந்திரா ஃபினான்ஸ் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 13 கிளைகளுடன், இந்நிறுவனம் தனிநபர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு பரந்த அளவிலான நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT