முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் யாழில் அனுஷ்டிப்பு

RSM
 
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு இன்று யாழ்;.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (18) இடம்பெற்றது.
 
 
இதன்போது, பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
 
 
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும், ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினார்கள்.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கரா)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...