கொழும்பின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

Rizwan Segu Mohideen
 
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நாளை (18) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
 
12 மணித்தியாலங்கள் வரை இடம்பெறவுள்ள குறித்த நீர் வெட்டு, நாளை (18) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் இடம்பெறவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
 
அதன் அடிப்படையில் பின்வரும் பிரதேச மற்றும் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.
 
1. களனி பிரதேச சபை பிரதேசங்கள்
2. பேலியகொட நகர சபை பிரதேசங்கள் 
3. வத்தளை நகர சபை பிரதேசங்கள்
4. ஹெந்தள பிரதேச சபை பிரதேசங்கள்
 
களனி மற்றும் வத்தளை பிரதேசத்திற்கு நீர் விநியோகிக்கப்படும் 900 மில்லி மீற்றர் (90cm) நீர்க்குழாய்கள் இரண்டில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய இருப்பதன் காரணமாக, குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
19 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...