மே 19 முதல் GSP+ வரி விலக்களிப்பு அமுல் | தினகரன்

மே 19 முதல் GSP+ வரி விலக்களிப்பு அமுல்

 
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ். பிளஸ் (GSP+) வரிச்சலுகை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19)  முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம்  இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம், நல்லாட்சி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வரி விலக்களிப்பு வழங்கப்படும்.
 
அந்த வகையில் இது வரை காலமும் வழங்கப்பட்ட GSP+ வரி விலக்களிப்பு, கடந்த அரசாங்க காலத்தில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து இலங்கையில், ஊழலை ஒழிப்பதற்கும், மனித உரிமைகளை பேணுவதற்கும், நீதியின் ஆதிபத்யத்தை உறுதி செய்வதற்கும் மேலும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியமை தொடர்பில் கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வரி (GSP+) விலக்களிப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...