வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்கள் 69ஆவது நக்பா தினம் அனுஷ்டிப்பு | தினகரன்

வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்கள் 69ஆவது நக்பா தினம் அனுஷ்டிப்பு

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின் பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வை நினைவுகூறும் 69ஆவது ‘நக்பா’ தினம் நேற்று பலஸ்தீனர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை அடுத்து 750,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டதோடு 500க்கும் அதிகமான கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் அழிக்கப்பட்டன.

இஸ்ரேல், ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் காசா பகுதி என வரலாற்று பலஸ்தீனம் எங்கும் நேற்று பேரணிகள், கூட்டங்கள், மெழுகுவர்த்தி ஏற்றி பலஸ்தீனர்கள் நக்பா தினத்தை அனுஷ்டித்தனர். இதன்போது சைரன் ஒலி எழுப்பப்பட்டு பேரழிவு தினம் நினைவுபடுத்தப்பட்டது.

இதில் பிரதான பேரணி ரமல்லாஹ்வின் யாஸிர் அரபாத் அடக்கஸ்தலத்தில் இடம்பெற்றது. இது தவிர சர்வதேச அளவிலும் நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

1948இல் வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களது சந்ததிகள் என மில்லியன் கணக்கானோர் நாடற்ற நிலையில் அகதி முகாம்களில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை இஸ்ரேல் தடுத்து வருகிறது. எனினும் ஐ.நா தீர்மானம் 194ஐ ஆதாரமாகக் கொண்டு மீண்டும் திரும்பும் உரிமையை பலஸ்தீனர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...