ஈராக் எல்லைக்கு அருகில் சிரிய துருப்புகள் குவிப்பு

சிரிய இராணுவம் ஈரான் ஆதரவு போராளிகளின் உதயுடன் சிரியாவின் ஈராக் மற்றும் ஜோர்தான் நாட்டு எல்லைக்கு அருகிலுள்ள பாலைவன பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த பிராந்தியத்தை ஒட்டி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிடம் இருந்து கைப்பற்றிய அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி அமைந்துள்ளது.

ஈரான் ஆதரவு ஷியா போராளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிரிய துருப்புகள் டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் கடந்த ஒருசில தினங்களாக சபா பியார் சிறு நகரை நோக்கி நகர்ந்து வருவதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

மூலோபாயம் கொண்ட டமஸ்கஸ் மற்றும் பக்தாத் நெடுஞ்சாலையை ஒட்டிய பின்தங்கிய சிறு நகரை இராணுவம் மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த வாரம் கைப்பற்றியது. இந்த பகுதி மேற்குலக ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்களிடம் வீழ்வதை தவிர்க்க சிரிய இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

“பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் அவர்கள் பெரும் அளவான படையினரை குவித்து வருகின்றனர்” என்று சிரிய கிளர்ச்சியாளர் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...