Home » DELL Technologies உடன் 30 ஆண்டு கூட்டாண்மையை கொண்டாடும் SITL

DELL Technologies உடன் 30 ஆண்டு கூட்டாண்மையை கொண்டாடும் SITL

by Rizwan Segu Mohideen
September 20, 2023 3:16 pm 0 comment

Softlogic Information Technologies (Pvt) Ltd (SITL) ஆனது அண்மையில் Dell Technologies Inc உடன் இணைந்து தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. DELL மற்றும் அதன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த சாதனையை கௌரவிக்கும் வகையில், SITL ஆனது கொழும்பு Cinnamon Lakeside ஹோட்டலில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கையில் கடந்த 30 வருடங்களாக Dell இன் வர்த்தகநாம பிரசன்னத்தை வலுப்படுத்துவதில் SITL இன் குறிப்பிடும்படியான பங்கு தொடர்பான பயணத்தின் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள பங்கேற்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது. அது மாத்திரமன்றி இந்நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அண்மைய Dell தயாரிப்புகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்வின் போது, SITL ஆனது Dell உடனான தமது மூலோபாய அணுகுமுறை மற்றும் வெற்றிகரமான கூட்டாண்மை தொடர்பில் விளக்கியது. குறிப்பாக உள்ளூர் சந்தையில் Dell வர்த்தகநாமத்தை ஒரு முக்கிய வர்த்தகநாமமாக நிலைநிறுத்துவதில் தாம் ஆற்றிய முக்கிய பங்கு தொடர்பில் இங்கு எடுத்துக்காட்டப்பட்டது. சிறப்பான விளக்கக்காட்சிகள் மற்றும் தகவல், கலந்துரையாடல்கள் மூலம், இந்த குறிப்பிடும்படியான சாதனைக்கு பங்களித்த கூட்டு முயற்சிகள் தொடர்பான ஆழமான புரிதலை பங்கேற்பாளர்கள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் ரோஷன் ரசூல் தெரிவிக்கையில்; “இலங்கையில் ஒப்பீட்டளவில் Dell சாதனங்கள் குறைவாகவே அறியப்பட்ட காலத்தில், SITL ஆனது Dell உடனான தனது கூட்டாண்மையை ஆரம்பித்தது.

வணிக நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கு Dell தயாரிப்புகள் வழங்கக்கூடிய சாத்தியமான மதிப்பை உணர்ந்து, Dell வர்த்தகநாமத்தை இலங்கையில் ஒரு முக்கிய வர்த்தக நாமமாக அதனை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய அணுகுமுறையை SITL மேற்கொண்டது. இலங்கை சந்தையில் Dell இன் வன்பொருள் மற்றும் தீர்வுகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவதற்கு சந்தைப்படுத்தல் முயற்சிகள், விரிவான தயாரிப்பு தொடர்பான அறிவு மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இவை ஒரு சாதகமான மாற்றத்தின் முக்கிய உந்து சக்தியாக அமைகின்றது.” என்றார்.

DELL உடனான குறிப்பிடும்படியான 30 வருட பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த, DELL Technologies இனது இலங்கைக்கான முகாமையாளர் வருண ஜயலத், “IT கூட்டாண்மையின் அடிப்படையில் எமது 30 ஆண்டுகால சிறப்பான பயணம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் பெருமைடையவதோடு, வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்! DELL வர்த்தகநாமத்திற்கான SITL இன் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் எமது பகிரப்பட்ட தூரநோக்கானது, உண்மையிலேயே காலத்தின் கட்டாயமாக அமைகிறது. இது எமது கூட்டாண்மையின் வலிமை மற்றும் SITL தனது வாடிக்கையாளர்களுக்கும் தொழில்துறைக்கும் வழங்கியுள்ள மதிப்பை வெளிப்படுத்துகிறது. எமது உறுதியான கூட்டாண்மை ஆனது குழுப்பணி, நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் சக்திக்கு ஒரு சான்றாகும். SITL ஆனது, பல வருடங்களாக சந்தேகத்திற்கிடமின்றி எண்ணற்ற சவால்களைச் சமாளித்து, தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தழுவி, வளர்ச்சியடைந்து, புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. அத்தகைய ஆற்றல்மிக்க துறையை மாற்றியமைத்து, வளரும் திறன் ஒரு சிறிய விடயம் அல்ல. நாம் எதிர்காலத்தில் இதனைத் தொடரும்போது, எமது தகவல் தொழில்நுட்ப கூட்டாண்மை தொடர்ச்சியாக செழிப்படைந்து, புதிய தரங்களை அமைத்து, தொழில்துறையில் உள்ள ஏனையவர்களையும் ஊக்குவிக்கும் என்பதில் எமது எவ்வித சந்தேகமும் இல்லை. எதிர்வரும் 30 வருடத்திலும் வெற்றி, புத்தாக்கம், வளர்ச்சி ஆகியவற்றை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து, தொழில்நுட்ப உலகில் மேலும் பல குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படுத்துவோம். இந்த பாராட்டத்தக்க சாதனைக்கு உண்மையிலேயே வாழ்த்துகள்! ” என்றார்.

மென்பொருள், வன்பொருள் மற்றும் வளர்ந்து வரும் வணிக உருமாற்ற தீர்வுகள் சந்தையில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்கான SITL இன் தூரநோக்கை முன்னிலைப்படுத்தி இக்கொண்டாட்டம் நிறைவடைந்ததோடு, இது பல்வேறு தனியார் மற்றும் அரச நிறுவன தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சியாகவும் அமைகிறது. குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் IT உட்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், செயற்றிறனை அதிகரிக்கவும், டிஜிட்டல் மாற்றத்தை செயற்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்ட வணிக மாற்றத் தீர்வுகளை SITL இன்று வழங்கி வருகிறது. வேகத்தை மேலும் மேம்படுத்துதல், செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல், பாதுகாப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வணிகத் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காக இத்தீர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பணியிட தீர்வுகள், தரவு மைய நவீனமயமாக்கல், ஹைப்ரிட் கிளவுட் தீர்வுகள், தரவு பகுப்பாய்வு மற்றும் AI தீர்வுகள், பாதுகாப்புத் தீர்வுகள், IoT (Internet of Things) தீர்வுகள், சேவைகள் மற்றும் ஆலோசனைத் தீர்வுகள் ஆகியன, Softlogic IT மற்றும் DELL இணைந்து வழங்கும் சில முக்கிய வணிக மாற்றத்திற்கான தீர்வுகளாகும்.

SITL இனது தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: https://softlogicit.lk/

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT