பிரதமர் மோடி குறித்து அவதூறு: ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்கு

பிரதமர் மோடி குறித்து அவதூறு வெளியிட்டதாக ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரபிரதேச பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னணி இணையதள தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அப்போது பல்வேறு தரப்பினரும் தெரிவித்த புகார் காரணமாக பின்னர் அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நந்த் கிஷோர் என்ற வக்கீல் ஷாஜகான்பூர் பொலிஸ் அத்தியட்சகா் அலுவலகத்தில் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நேற்று புகார் செய்தார்.

பிரதமர் மோடி குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல் தனக்கும், மற்றவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை பொலிஸ் அத்தியட்சகா் கமல் கிஷோரும் உறுதி செய்தார். எனினும் இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், எனவே இது குறித்து எதையும் தெரிவிக்க முடியாது எனவும் கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
7 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...