வெலிபன்னவில் மூவர் மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

 
களுத்துறை, வெலிபன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியஹொரடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
குறித்த சம்பவத்தில் மூவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ள நிலையில், களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன்போது, ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
மரணமடைந்தவர், 2 ஆம் கட்டை, கொஸ்கொட எனும் முகவரியைச் சேர்ந்த 24 வயதான கொஸ்கொட லொகு என அழைக்கப்படும் நுவன் சாமர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
குறித்த கொலைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் (09) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...