இலங்கை அணியில் விளையாட அடித்தளம்

1990ல் தான் பெற்ற ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதானது தான் இலங்கை அணியில் விளையாடுவதை உறுதிப்படுத்திய ஒரு சான்றுப்பத்திரமாகும் என முன்னாள் இலங்கை அணித் தலைவரும் முன்னாள் தேசிய பயிற்றுவிப்பாளருமான மார்வன் அத்தபத்து கூறியுள்ளார்.

பாடசாலை கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் நான் ஆனந்தா கல்லூரியின் வெற்றிகளுக்காக விளையாடியுள்ளேன்.

அனேகர் என்னை இலங்கையின் எதிர்கால முதுசமாகக் கருதினர்.

நானும் எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன். ஆனால் உத்தரவாதம் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனக்கு முன்னாள் ஒப்சேர்வர் விருதைப்பெற்றவர்கள் இலங்கை அணியில் திறமையாக விளையாடினர். நான் இந்த ஒப்சேர்வர் விருதைப் பெற்ற போது அதே அணியில் இணைந்து கடுமையாகப் பணியாற்றினேன் என்றும் தமது கிரிக்கெட் வாழ்வை அத்தபத்து நினைவூட்டினார்.

அந்த உயரிய இலக்கை அடைய 100 வீதம் நான் அர்ப்பணம் பூண்டேன்.

இறுதியில் நான் ஒப்சேர்வர் விருதை வெற்றி கொண்டேன் என 46 வயதான முன்னாள் தலைவர் அத்தபத்து தெரிவித்தார்.

ஒப்சேர்வர் விருதைப்பெற்று சில மாதங்களின் பின்னர் இந்தியாவில் அத்தபத்து டெஸ்ட் ஆட்டத்தில் கன்னி முயற்சியில் ஈடுபட்டார்.

ஆட்டங்களை வெற்றி கொள்ளவே பாடசாலைகள் முழு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இலங்கை தேசிய அணியில் விளையாட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உருவாக அவை இலக்கு கொள்ளவில்லை.

பாடசாலைக்கு இடையில் ஆட்டத்தில் அல்லது ஏனைய மட்ட ஆட்டங்களில் ஒரு அணி வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்வதால் அந்த குறிப்பிட்ட பாடசாலை அணி முன்னேறி விட்டதெனக் கருத முடியாது.

இலங்கை அணிக்கு விளையாட அதிகளவு வீரர்கள் உருவாக்குவதே முக்கியமாகும்.

தம்முடைய காலகட்டத்தில் பல பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் நேரடியாக தேசிய அணிகளில் இணைந்தனர். தற்கால பாடசாலை கிரிக்கெட்டுக்கும் சர்வதேச மட்டத்துக்கும் பாரிய இடைவெளி உள்ளனது.

ஒரு பாடசாலை கிரிக்கெட் வீரரை அடையாளம் கண்டு அவர் இலங்கைக்காக விளையாடுபவர் எனக் கூற முடியும்.

2007 வரை 17 நீண்ட ஆண்டுகள் இவர் (Test opener) ‘டெஸ்ட் ஓப்பனராக விளையாடி உள்ளார்.

வெளி இடங்களில் இருந்து வீரர்களை ‘இறக்குமதி’ செய்ய முயல்வது பாடசாலை கிரிக்கெட்டைப் பாதித்துள்ளது.

வெற்றி கொள்வதற்காக வெளி இட வீரர்களை வாடகைக்கு அமர்த்தலாகாது. பாடசாலை பயிற்றுவிப்பாளர்களும், அதிபர்களும், பழைய மாணவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் ரீ-20 கிரிக்கெட் தொடர்பாக நான் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். அது விளையாட்டு வீரர்களின் இயற்கையான ஆளுமையைக் கொன்றுவிடும். அவர்களின் செயற்பாட்டையும் அழித்து விடும்.

வெற்றிகளுக்கான கிரி்க்கெட் வீரராக மாறுவதற்கு குறுக்கு வழிகள் இல்லை. ஆனால் கடும் உழைப்பே இன்றியமையாதது.

உங்களை நம்புங்கள் கடுமையாக உழையுங்கள். அர்ப்பண ரீதியாக செயற்படுங்கள். அப்போது நீங்கள் வெற்றியை அனுபவித்துச் சுவைக்கலாம்.

இதுதான் இளம் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு எமது ஆலோசனைகள் என்றும் அத்தபத்து கூறினார். (எப்.எம்.)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
11 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...