அமெ. கொடுத்த போர் விமானம் இஸ்ரேல் வானில் அணிவகுப்பு

இஸ்ரேல் தனது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த எப்–15 போர் விமானங்களை காட்சிப் படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் ஐந்து எப்–15 விமானங்களில் மூன்று டெல் அவிவில் மத்தியதரைக் கடலுக்கு மேலால் பறந்ததை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர். இந்த விமானங்கள் ஜெரூசலம் உட்பட ஏனைய நகரங்களுக்கு மேலாலும் பறந்துள்ளன.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட லொக்ஹீட் மார்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எப்–15 விமானங்களின் அணிவகுப்பே செவ்வாயன்று இஸ்ரேலிய சுதந்திர தினத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.

இஸ்ரேல் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை காட்டும் வகையிலேயே கடந்த டிசம்பரில் ஐந்து எப்–15 போர் விமானங்களை பெற்றது. இதன்படி அமெரிக்காவுக்கு வெளியில் எப்–15 விமானங்கள் இயங்கும் ஒரே நாடாக இஸ்ரேல் உள்ளது.

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுதோறும் 3 பில்லியனுக்கும் அதிகமான நிதியை பெற்று வருகிறது.

ஒரு விமானியால் செலுத்தப்படும் இந்த ஜெட்கள் ஆயுதங்களை வரிசையாக ஏந்திக்கொண்டு மணிக்கு 1,900 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாகும். இது அதிநவீன ஏவுகணை முறையில் இருந்து தப்பிச் செல்லும் திறன் கொண்டதாகும். 


There is 1 Comment

Good

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...