சோமாலிய அமைச்சர் தவறுதலாக இராணுவத்தினரால் சுட்டுக் கொலை | தினகரன்

சோமாலிய அமைச்சர் தவறுதலாக இராணுவத்தினரால் சுட்டுக் கொலை

இஸ்லாமியவாத ஆயுததாரி என தவறுதலாக அடையாளம் காணப்பட்ட 31 வயதான சோமாலிய அமைச்சர் ஒருவரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தலைநகர் மொகடிசுவில் அவரது வாகனம் ஜனாதிபதி மாளிகையை நெருங்கியபோதே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் அப்துல்லாஹி அப்பாஸின் கொலையை அடுத்து ஜனாதிபதி தனது எத்தியோப்பிய விஜயத்தை பாதியில் நிறுத்திக்கொண்டிருப்பதாக அரச வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் மொகடிசு மீது தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கி மோதலில் ஈடுபட்டு வரும் ஆயுதக் குழுவுடன் சோமாலிய பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பதற்ற சூழலில் இதற்கு முன்னரும் படையினர் அரச அதிகாரிகள் மீது சூடு நடத்தியுள்ளனர். எனினும் பொதுப் பணிகள் அமைச்சரான அப்பாஸின் கொலையே தவறான தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட மிக உயர்மட்ட அதிகாரி ஆவார்.

முன்னாள் அகதியான அப்பாஸ், சிவில் யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான சோமாலியர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கென்யாவின் டடாப் முகாமில் வளர்ந்தவராவார்.

முன்னாள் அமைச்சரை தோற்கடித்த அவர் கடந்த நவம்பரில் நாட்டின் மிக இளம் எம்.பியாக தெரிவானார்.

சோமாலியாவின் கணிசமான பகு தியை அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட அல் ஷபாப் குழுவே கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...