மரணத்தறுவாயில் படம் பிடித்த இராணுவ பெண்

அமெரிக்க இராணுவத்தின் பெண் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தான் மற்றும் நான்கு ஆப்கானியர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தருணத்தின்போது எடுத்த படத்தை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சி ஒன்றின்போது மோட்டார் குண்டொன்று வெடித்ததில் 22 வயதான ஹில்டா கிளைடனுடன் நான்கு ஆப்கான் தேசியப் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆப்கானின் கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்த புகைப்படத்தையே அமெரிக்க இராணுவ சஞ்சிகை தற்போது வெளியிட்டுள்ளது.

கிளைடன் குடும்பத்தினரின் அனுமதியுடனேயே புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சக ஆண் வீரர்களுடன் பெண் படையினர் யுத்த நடவடிக்கை மற்றும் பயிற்சியின்போது முகம்கொடுக்கும் ஆபத்தை எடுத்துக் காட்டும் ஓர் அடையாளமாக கிளைடனின் மரணம் அமைந்துள்ளதாக, அப்புகைப்படம் பற்றி அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
7 + 9 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...