மத்திய கிழக்கு அமைதி: டிரம்ப்–அப்பாஸ் நம்பிக்கை

மத்திய கிழக்கு அமைதி உடன்பாடொன்றுக்கு ‘மிகச்சிறந்த வாய்ப்பு’ இருப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்தபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையில் கடந்த புதனன்று அப்பாஸை வரவேற்ற டிரம்ப், “நாம் இதனை செய்வோம்” என்று உறுதி அளித்தார்.

எனினும் நீண்ட கால திட்டமாக இருக்கும் 1967க்கு முன்னரான எல்லைகளை அடிப்படையாக கொண்டு அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று டிரம்பிடம் அப்பாஸ் வலியுறுத்தினார். “ஜனாதிபதி அவர்களே தற்போது எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது” என்று அப்பாஸ் இரு தரப்பு சந்திப்புக்கு பின்னரான செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

எவ்வாறாயினும் இஸ்ரேல்–பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வு குறித்து டிரம்ப் ஆர்வம் காட்டாதவராக உள்ளார். கடந்த பெப்ரவரியில் அவர் கூறியதாவது, “இரு தரப்பும் விரும்பக் கூடிய இரு நாட்டில் இருந்து ஒரு நாடு குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது” என்றார். டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு குறித்து பலஸ்தீன தரப்பில் கடும் கவலை இருந்து வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...