வித்தியா வழக்கு; சந்தேகநபர்கள் விளக்கமறியல் மே 17 வரை நீடிப்பு

RSM
 
புங்குடுதீவு பாடசாலை  மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மே 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 
மாணவி  வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (03)  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம். றியாழ் இவ்வுத்தரவை வழங்கினார்.
 
இதன்போது, சந்தேகநபர்கள் 10 பேரும்   நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கடந்த வழக்கு தவணையில் (28) இரு சந்தேகநபர்கள் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மன்றினால் விடுதலை செய்யப்பட்டனடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 6 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...