Tuesday, March 19, 2024
Home » நாட்டின் பல பகுதிகளில் மழை; சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

by Rizwan Segu Mohideen
October 7, 2023 9:48 am 0 comment

– கிழக்கு, ஊவா, முல்லைத்தீவு, மாத்தளை பகுதிகளில் மாலையில் மழை

இன்றையதினம் (07) நாட்டின், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT