Friday, March 29, 2024
Home » உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசியலமைப்பிலோ, வேறு எந்தவொரு சட்டத்திலுமோ சர்வதேச விசாரணைக்கு இடமில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசியலமைப்பிலோ, வேறு எந்தவொரு சட்டத்திலுமோ சர்வதேச விசாரணைக்கு இடமில்லை

- அவ்வாறு விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது

by Rizwan Segu Mohideen
October 6, 2023 4:42 pm 0 comment
http://archives1.thinakaran.lk/node/90997/

– அறிக்கையை ஆயர் ஆராய்ந்ததும் ஜனாதிபதி கலந்துரையாடுவார்

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் அரசியலமைப்பிலும் வேறு எந்த சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இதுபோன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை” என்ற தலைப்பில் வெளியான செய்தி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், ஆயர் புனித ஹெரால்ட் அந்தோனி பெரேரா ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 88 தொகுதிகள் மற்றும் 48,909 பக்கங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் 2023 ஏப்ரல் 20 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், புனித ஹெரால்ட் அந்தோனி ஆயரிடம் கையளித்தார்.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், ஆயர் புனித ஹெரால்ட் அந்தோனி பெரேரா ஆண்டகையின் நேற்று (05) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொலைபேசியில் கலந்துரையாடிய போது, தான் குறித்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தயாராக உள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் அரசியலமைப்பிலும் வேறு எந்த சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இதுபோன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது.

சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

திருச்சபை, ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து மேலும் கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT