மஹிந்தவுக்கு ஆயுட் தண்டனை வழங்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆயுட் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி மேதின கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ ,புலிகளுக்கு 2 மில்லியன் ரூபா பணம் வழங்கியிருந்தார். இதற்காக அவருக்கு ஆயுட் தண்டனை வழங்க வேண்டும்.2005 இல் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வருகையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு 15 மீட்டர் உயராமாகவே இருந்தது. புதிய அரசாங்கம் பொருப்பேற்கையில் அதன் உயரம் 45 மீட்டர்களாக உயர்ந்திருந்தது. இந்த ஆட்சயில் குப்பை மேட்டின் உயரம் 3 மீட்டர்களினாலே உயர்ந்தது. மஹிந்தவின் பாவங்களை இந்த அரசாங்கத்திற்கு சுமக்க நேரிட்டுள்ளது. இது எமது தவறல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...