GSP+ வழங்குவதற்கு எதிரான யோசனை தோற்கடிப்பு | தினகரன்

GSP+ வழங்குவதற்கு எதிரான யோசனை தோற்கடிப்பு

 
இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை கிடைப்பதை தடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (27) பெலஜியம் நாட்டின் பிரஸல்ஸ் தலைநகரில் இடம்பெற்ற குறித்த வாக்கெடுப்பில், குறித்த யோசனை 317 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வரிச்சலுகை, இலங்கைக்கு வழங்கக் கூடாது என்பது தொடர்பிலான குறித்த யோசனைக்கு எதிராக 436 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு, அதற்கு ஆதரவாக 119 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. இதில் 22 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்பான விதத்தில் உரிய முறையிலான நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளதால், GSP+ வரிச்சலுகை,  
இலங்கைக்கு வழங்கக்கூடாது எனும், குறித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டாகும்.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...