Thursday, March 28, 2024
Home » சீதா, யானை சுடப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது

சீதா, யானை சுடப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது

by sachintha
October 6, 2023 7:33 am 0 comment

நமது நாட்டில் கௌரவப்படுத்தப்பட்டு புனிதப்படுத்தப்படும் யானைகளை கொடூரமாக கொலை செய்வது கவலைக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அண்மையில் மஹியங்கனையில் யானையொன்று சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்ைகயில்,
மஹியங்கனையில் சீதா யானை சுடப்பட்டதன் பின்னர் யானைகள் கொலை தொடர்பான விவாதம் வேறு தோற்றம் பெற்றது. ஊடக அறிக்கைகளின் படி பழக்கப்படுத்தப்பட்ட சீதா யானையை சுட்டவர், காடுகளை பாதுகாக்கும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியாவார்.

சீதா யானையின் கொலைக்குப் பின்னரும் யானைகள் கொலை தொடர்பான உலக அறிக்கையிலும் இலங்கையின் மனிதாபிமானம் மற்றும் சூழல் தொடர்பான கலாசாரத்தை யானை வெடியான ‘ஹக்க பட்டாசு’க்குக்கு சமப்படுத்தியுள்ளது.

அதன்படி செப்டம்பர் 27 புதன்கிழமை முதல் 29 வெள்ளிக்கிழமை வரையிலான 48 மணி நேரத்திற்குள் 13 யானைகள் பலியாகிள்ளன. 2022 ஆம் ஆண்டு உலகில் அதிக யானைகளைக் கொன்ற நாடாக இலங்கை உலக சாதனை படைத்துள்ளது என்ற செய்திகளை விட இந்த இரண்டு நாட்களின் அறிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதன்படி அந்த எண்ணிக்கை 420 ஐ தாண்டியுள்ளது. அதைவிட மிகவும் பாரதூரமான செய்தி என்னவெனில் 2023 செப்டம்பர் 30 வரை இவ்வெண்ணிக்கை 400 தாண்டியமையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT