Friday, March 29, 2024
Home » அந்நியச் செலாவணியை சேமிக்க புதிய திட்டம்

அந்நியச் செலாவணியை சேமிக்க புதிய திட்டம்

by sachintha
October 6, 2023 6:20 am 0 comment

தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில், கிராமியப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை

வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தை மையமாக வைத்து வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தை, எதிர்காலத்தில் நாடு பூராகவும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், “பாரிய சிக்கலில் இருந்த நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத நேரத்தில் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த சவால்மிக்க பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வேலைத்திட்டங்களால் தற்போது இந்நாடு படிப்படியாக முன்னேறி வருகின்றது. இதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் அவர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். அந்த வகையில் எமது அமைச்சு, கிராமிய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முக்கியமாக விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கிராமிய மக்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT