ரூபா 32 இலட்சம் மோசடி; 26 வயது பெண்ணை தேடும் பொலிஸ் | தினகரன்

ரூபா 32 இலட்சம் மோசடி; 26 வயது பெண்ணை தேடும் பொலிஸ்

 
கையடக்க தொலைபேசிகளை மொத்த விலையில் கொள்வனவு செய்து, ரூபா 32 இலட்சத்து 64 ஆயிரத்து 740 (ரூபா 3,264,740) இனை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில்
26 வயது பெண் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

லக்மாலி பிரியதர்சினி எனும் குறித்த பெண், பல்வேறு வர்த்தக நிறுவனங்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்து, அதற்கான பணத்தை காசோலைகளாக வழங்கியுள்ளதோடு, குறித்த காசோலைகளுக்கான பணத்தை வங்கியில் இடாது தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான யுவதியை பொலிசார் தேடி வருகின்றனர்.
 
பெயர்: முஹுந்து கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி
பிறந்த திகதி: 1991.02.19
தே.அ.அ.இல: 915502717V
கடவுச்சீட்டு இல: N 5627745
முகவரி: 141, பண்டாரநாயகபுர, மல்கடுவாவ, குருணாகல்
2/A 12, பிக்சிட்டி. பில்வத்தை, யட்டியன
 
குறித்த நபர் தொடர்பான விபரங்கள் தெரியும் நிலையில், பொலிஸ் கம்பஹா விசேட விசாரணை பிரிவின் 077 3890959 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...