காரை மோதவிட்ட பலஸ்தீனர் இஸ்ரேல் படையால் கொலை | தினகரன்

காரை மோதவிட்ட பலஸ்தீனர் இஸ்ரேல் படையால் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சட்டவிரோத யூதக் குடியேற்ற பகுதிக்கு அருகில் இஸ்ரேல் படையினரால் பலஸ்தீனர் ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பலஸ்தீன வாகனம் ஒன்று பஸ் நிலையத்தின் மீது மோதி இஸ்ரேலிய சிவிலியன் ஒருவர் காயமடைந்ததாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவம், அங்கிருந்த படையினரால் வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த பலஸ்தீனரை தாக்குதல்தாரியென இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சம்பவ ம் குறித்து இஸ்ரேல் ஊடகம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில், பலஸ்தீனரின் வாகனம் பஸ் வண்டி ஒன்றின் பின்புறமாகவே மோதி இருப்பது தெரிகிறது.

ஜெரூசலத்தை சேர்ந்த 21 வயது மூசா மசூர் மஷஹ்ரா என்பவரே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட 19 ஆவது பலஸ்தீனர் மஷஹ்ரா ஆவார். இவர்களில் 12 பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த 2015 செப்டெம்பர் தொடக்கம் இஸ்ரேலிய படையினரால் குறைந்ததது 244 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...