பெரிய விண்கல் ஆபத்தின்றி பூமியை நெருங்கி கடந்தது

மிகப்பெரிய விண்கல் ஒன்று எந்த ஆபத்தும் இன்றி கடந்த புதன்கிழமை பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து சென்றுள்ளது.

சுமார் 2000 அடி கொண்ட இந்த விண் பொருள் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் ஐந்துக்கும் குறைவான அளவு நெருங்கி வந்தது. 2014 ஜே.ஓ25 என்ற இந்த விண்கல் 2004 இல் இருந்து பூமியை மிகவும் நெருங்கி வந்த பொருளாகும்.

கடந்த புதன்கிழமை இரவு வேளையில் இந்த பாறையை தெளிவாக காண வாய்ப்பு கிடைத்ததாக வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் விண்வெளி தொலைத்தொடர்பு வளாகத்தில் உள்ள நாசாவின் 70 மீற்றர் (230 அடி) அன்டன்னாவை பயன்படுத்தி பெறப்பட்ட படங்களில், வேர்கடலை வடிவமான விண்கல் ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை சுழல்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விண்கல் புதனன்று பூமியில் இருந்து 1.8 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் கடந்து சென்றது.

இந்த அளவு பெரிய விண்கல் ஒன்று அடுத்து எதிர்வரும் 2027 ஆம் ஆண்டிலேயே பூமியை மிக நெருங்கி வரவுள்ளது.

1999 ஏ.என்10 என்ற அந்த விண்கல் ஒரு சந்திரத் தூரத்தில் சுமார் 380,000 கிலோமீற்றர் இடைவெளியில் பூமியை நெருங்கி வரவுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
11 + 8 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...