வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த டிரம்ப் உத்தரவு

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உயர் திறன் வேலைவாய்ப்புகளை பெறும் விசா திட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் ஆணையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

சட்ட அமுலாக்கல் திணைக்களங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நேரடி உத்தரவின்படி அரச திட்டங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களை நீக்கும்படி கோரப்பட்டுள்ளது.

விஸ்கொன்ஸின் மாநிலத்தின் உபகரண தொழிற்சாலை ஒன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த டிரம்ப், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவது அமெரிக்க பொருட்களை வாங்குவது தொடர்பான ஆணையில் கைச்சாத்திட்டார்.

இதன்படி உயர்திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை பெறும் எச் 1பி விசா முறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விசா முறையில் விதிகள் மாற்றப்படாதபோதும் அதன் நோக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக டிரம்பின் உதவியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எச் 1பி விசா திட்டத்தில் ஆண்டுதோறும் இந்திய நாட்டு தொழிலாளர்களே அமெரிக்காவில் அதிக தொழில்வாய்ப்புகளை பெறுகின்றனர்.

“அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.

இனி நாம் வெளிநாடுகளின் கூட்டாட்சி ஒப்பந்தங்களின் அடிப்படையில் நமது தொழிலாளர்களை ஏமாற அனுமதிக்கப் போவதில்லை” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...