Friday, March 29, 2024
Home » ஆதரவற்ற சிறுவர், சிறுமியரின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்!

ஆதரவற்ற சிறுவர், சிறுமியரின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்!

ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் வேண்டுகோள்

by gayan
October 5, 2023 2:53 pm 0 comment

‘நோயற்ற சுகதேகியான வாழ்க்கைக்காக’ என்ற இலக்குடன் ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி வைத்தியசாலையில் கடந்த ஆறு வருடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மேற்படி சிகிச்சை நிலையத்தின் முகாமைத்துவ இயக்குனர் பி.சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.

ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் 336/1 களனிதிஸ்ஸ மாவத்தை, வனவாசல, வத்தளை என்ற முகவரியில் இயங்கி வருவதாகக் குறிப்பிடும் அவர், சிகிச்சைமுறைகள் பற்றி பின்வருமாறு விபரித்தார்:

திடீர் விபத்துகள் மற்றும் சத்திரசிகிச்சையின் பின்பு ஏற்படும் பலவீனம், வீக்கம், வலி, மூட்டுகள் சரியாக இயங்காமை, நடப்பதில் சிரமம் போன்ற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவற்றுடன் பாரிசவாதம் வாய்ப்பக்கமாக இழுத்துக் கொள்வதுடன், கண் மூடுவதில் சிரமம், பாகின்ஸன்ஸ், கிலன்பாரே போன்ற நரம்புநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகின்றது.

நீண்ட காலங்களாக இருக்கும் மூட்டு, உள்ளங்கை, மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களிலான வலி, வீக்கம், பிடிப்பு மற்றும் ஆத்தரைட்டீஸ் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

சிறு பிள்ளைகளின் பிறப்பின் போதும் பிற்காலங்களிலும் ஏற்படும் உடல்பலவீனங்கள் வயதுக்கேற்ற உடல்வளர்ச்சியில் குறைபாடு போன்றவற்றுக்கும் சிகிச்சை வழங்கப்படுகின்றது.

நாளாந்தம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அதேவேளையில், சிறுவர்களும் பெரியவர்களும் பெண்களும் ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை வார்ட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி படைத்தவர்கள் அல்லர். எனினும் சிகிச்சைக்கென தம்மைத் தேடி வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தமது தார்மீகக் கடமை என்ற வகையில் ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகம் சிகிச்சைகளை வழங்கி வருகின்றது. நிர்வாகத்தின் பரோபகார செயற்பாடுகளுக்கு கைகொடுக்கும் வகையில் பலர் ஆதரவற்ற நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு முகாமைத்துவ இயக்குனர் பி.சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.

சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு சென்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மனிதநேயமிக்க பரோபகாரிகள் தாமாக முன்வந்து உதவிகளை வழங்கி வருகின்றனர்என்று சுட்டிக் காட்டிய அவர், கடந்த ஆறு வருடகால இந்தப் பயணத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை நிலையத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி மனித புனர்வாழ்வு நிலையமும் சமாந்தரமாக கைகோர்த்துப் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

தொண்டர் ஸ்தாபனம் குறித்து அவர் தகவல் தருகையில், ஸ்ரீ லக்ஷ்மி மனித புனர்வாழ்வு நிலையம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட தொண்டர் ஸ்தாபனமாகும். இந்தத் தொண்டர் ஸ்தாபனம் ஆதரவற்றவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன், குறிப்பாக சிகிச்சை தேவைப்படுகின்ற சிறுவர் சிறுமிகளை விஷேடமாக கவனத்தில் எடுத்து சிகிச்சை அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான சிறுவர் சிறுமிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுக்கு கற்பித்தல், விளையாட்டை ஊக்குவித்தல், பேச முடியாதவர்களுக்கு பேச்சுப்பயிற்சி மற்றும் கற்பித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஸ்ரீ லக்ஷ்மி மனித புனர்வாழ்வு நிலையம் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

விஷேட தேவையை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கான இந்தப் பயணம் முழுவெற்றி அடைய வேண்டுமாயின் பொதுமக்களினதும் பரோபகாரிகளினதும் உதவிக்கரம் தேவை என ஸ்ரீ லக்ஷ்மி ஆயுர்வேத சிகிச்சை மையம் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி மனித புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றின் ஸ்தாபகரரான பி. சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.

சிகிச்சை பெற விரும்புவோர் வத்தளை, வனவாசல, களனிதிஸ்ஸ முகவரியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறலாம். தகவல்கள் பெற விரும்புகின்றவர்கள் 076 – 6266332 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT