கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திக் கிளையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தேசிய ஜக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார -தலைவர் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி அவர்களினால் விசேட மீலாத் உரை நிகழ்த்தப்பட்டது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.என். திருமதி மாளவியாராச்சி, கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஹேமான்த பிரேமதிலக, கல்வி அமைச்சின் புத்தக வெளியீடுகள் ஆணையாளர்இஸட். தாஜுதீன், கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுத்தீன், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கொழும்பு ரோயல் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ஹமீத் அல்ஹுஸைன் கல்லூரி, மல்வானை அல்முபாரக் மத்திய கல்லூரி உட்பட பல பாடசலைகளின் மாணவ, மாணவிகள், விஷேட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.