அக்‌ஷராவின் கோபம்

சமீபகாலமாக அரசியல் நிலவரம்பற்றி கருத்துக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் கமல். அவரது மகள் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டு போய்பிரண்டுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே இந்தி படங்களில் நடித்திருக்கும் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் தற்போது தமிழில் அஜீத் நடிக்கும் விவேகம் படம் மூலம் அறிமுகமாவதால் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அக்‌ஷராவை பொறுத்தவரை ரொம்பவும் அமைதியானவர் என்று கூறப்படுவதுண்டு. அவரை பொறுமை இழக்கச் செய்து கோபப்படுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்தது. மும்பையில் நடந்த, லாலி கி ஷாதி மைன் லாட்டூ தீவானா இந்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பட விநியோகஸ்தர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அவரை பேட்டி கண்டபோது குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து நிகழ்ச்சி நீண்டு கொண்டே சென்றதால் கோபம் அடைந்த அக்‌ஷரா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விநியோகஸ்தரிடம் கோபமாக வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அவரை பின்தொடர்ந்த பட தரப்பினர் சமாதானம் பேசினர். நீண்ட முயற்சிக்கு பிறகு கோபம் தணிந்து மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அக்‌ஷரா புறப்பட்டு சென்றார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...