Friday, March 29, 2024
Home » காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு அரசினால் நஷ்டஈடு
அநுராதபுரம் மாவட்டத்தில்

காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு அரசினால் நஷ்டஈடு

1 கோடி 11 இலட்சம் ஒதுக்கீடு

by mahesh
October 4, 2023 9:27 am 0 comment

அநுராதபுர மாவட்டத்தில் காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்பட்ட சேதங்களுக்காக வேண்டி அரசாங்கத்தினால் ஒரு கோடியே 11 இலட்சத்திற்கும் அதிகமான நிதியினை நஷ்டஈடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட நஷ்டஈட்டுக் குழுவின் தலைவியும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபருமான (காணி) சந்யா என்.ஜீ. அபேசேகர தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நஷ்டஈட்டுக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குழுவிற்கு கிடைக்கப்பெற்ற ஏழு உயிர்ச்சேதம் மற்றும் உடல் ரீதியான சேதம் ஐந்து உடைமைகள் சேதம் உட்பட்டவைகளுக்கு இதன்போது நஷ்டஈட்டுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. உடைமைகள் சேதத்திற்கு தற்சமயம் வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபாவினை பொருட்களின் அதிக விலையுடன் ஒப்பிடும் போது அத்தொகை போதுமானதாக இல்லாத காரணத்தினால் அத்தொகையினை அதிகரிப்பது குறித்து குழுவினர் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இதன்போது குழுவின் செயலாளரான வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் அலுவலக பிரதி ஆணையாளர் டப்ளியு.எம்.கே.எஸ். சந்ரத்ன, அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.ஏ.சீ. ரத்ணாயக்க, இடர் முகாமைத்துவ அநுராதபுரம் அலுவலக பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT