விமலின் பிணை உயர் நீதிமன்றிலும் தள்ளுபடி | தினகரன்

விமலின் பிணை உயர் நீதிமன்றிலும் தள்ளுபடி

 
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் முன்வைக்கப்பட்ட, பிணை மனு, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 
அரசாங்க வாகன முறைகேடு தொடர்பில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைதான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் பிணை மனு இன்று (21) உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான், மனுவை நிராகரித்தார்.
 
கடந்த ஆட்சியின்போது, கட்டுமானம், பொறியியல் சேவை, வீடமைப்பு அமைச்சராக இருந்தவேளையில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குரிய 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு ரூபா 91 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வழக்கு நேற்றைய தினம் (20) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விமல் வீரவங்ச ஏற்கனவே நீதிமன்றில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீதிமன்றில் முன்வைத்த விடயங்கள், அவருக்கு பிணை வழங்குவதற்கு போதிய காரணிகளை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தால், எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கபட்டது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...