Home » மூவருக்கு பெளதீகவியலில் நோபல்

மூவருக்கு பெளதீகவியலில் நோபல்

by mahesh
October 4, 2023 6:57 am 0 comment

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரோன்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக இந்த ஆண்டு பெளதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் தலைநகல் ஸ்டொக்ஹோமில் நேற்று (03) அறிவிக்கப்பட்ட இந்த விருதில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சுவீடன் நாடுகளைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி, பிரென்ஸ் கிரவுஸ் மற்றும் அன்னே எல் ஹூலியர் ஆகிய விஞ்ஞானிகளின் பெயர்களே அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களிலும் காணப்படும் எலக்ட்ரோன் மூலக்கூறுகளின் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நோபல் பரிசு விபரம் இந்த வாரம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. கடந்த திங்கட்கிழமை மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரசாயனவியலுக்கான நோபல் பரிசும், நாளை இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவிருப்பதோடு வரும் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசை வெல்பவர் பெயர் வெளியிடப்படும். நோபல் பரிசை வெல்பவருக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் சுமார் ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசு வழங்கப்படும். விருதை வெல்பவர்கள் பணப்பரிசை பகிர்ந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT