பெயார்வே ஹொட்டேல் - கொழும்பு வீதி உணவுத் திருவிழா

 
பிராந்தியத்தின் வீதி உணவு தொடர்பாக, புதிய பரிணாமம் ஒன்றை உருவாக்கி, அதில் களியாட்டங்களையும், குதூகலத்தையும் கலந்து, வித்தியாசமான அனுபவத்தை, ‘கொழும்பு வீதி உணவுத் திருவிழா’ பெற்றுத் தரவிருக்கிறது. பெயார்வே ஹொட்டேல் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்து அனுசரணையையும் வழங்குகிறது.
 
மார்ச் 18 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெறும் இத்திருவிழாவில், முக்கியமான 10 அம்சங்கள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலுள்ள ஆஸ்பத்திரி வீதி, திருவிழாக் களியாட்டங்களுடன், பல்வேறு இசை நிகழ்ச்சிகளைக் கொண்டதாக, கலைஞர்கள், கோமாளிகள் உட்பட பிரமுகர்களினால் நிறையவுள்ளது. நாவூறச் செய்யும் அற்புதமான சுவையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளின் ஒன்று திரட்டலே இங்கு பிரதான அம்சமாக அமைந்திருக்கும். உணவு வகைகளில் புதிய பரிணாமத்தை அடைந்துகொள்ள வழிவகுக்கும் கொழும்பு வீதி உணவுத் திருவிழா சுவையினதும், கலையினதும் சங்கமமாக திகழவுள்ளது.
 
எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் இணை அனுசரணையுடன், Bally’s Entertainment நிறுவனமும் இணைந்து கொள்கிறது. இமோரிச் ஐஸ்கிறீம் மேலதிக அனுசரணையாளராகத் திகழவிருக்கிறது. பெயார்வே ஹொட்டேல் கொழும்பு நிறுவனத்திற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ஊடக அனுசரணை மற்றும் வங்கி அலுவல்கள் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு ஹட்டன் நஷனல் வங்கி என்பனவும் தங்களது பங்களிப்புக்களை வழங்குகின்றன. மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை என்பன முக்கிய பங்காளிகளாக இணைந்து கொள்கின்றன. 
 
பெயார்வே ஹோல்டிங்ஸ் குழும லைப்ஸ்டைல் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் குலதுங்க இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “கொழும்புப் பிரதேசத்தில் காணப்படும் பல வண்ண மயமான கலாசாரங்களின் உணவு வகைகளை உற்றுநோக்குகையில், உணவு வேறுபாட்டின் உச்சத்தை அடைந்த ஒரு நகரமாக நாம் கொழும்பை அடையாளம் காண்கின்றோம்” என்று தெரிவித்தார். “கொழும்பு வீதி உணவு திருவிழா ஒரு புத்தம்புதிய அனுபவத்தையும், உணவுத் தோற்றங்களையும் பெற்றுத்தரும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், எமது இணை அனுசரணையாளர்கள், பங்காளிகள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். பங்குதாரர்களின் ஆர்வம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நிகழ்வில் நாம் பெரும் வெற்றியடைவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...