யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் கொழும்பில் கைது

RSM
 
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக  இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள்  மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த மூன்று சந்தேக நபர்களும்  மறைந்து வாழ்ந்து வந்த நிலையில்   கொழும்பு  கொட்டாஞ்சேனை பகுதி  வீடொன்றில்   பகுதியில் வைத்து  கடந்த வெள்ளிக்கிழமை (17)    கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்களான   தனஞ்சயன்  இக்ராம்  மற்றும் விஜித் பாரத்   ஆகியோராவர்.
 
இவர்கள் சுமார் 22 - 25 வயதுக்குட்பட்டவர்களாவர்.
 
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக பொலிஸார்  தேடுதல் நடாத்தி வந்த நிலையில் கொழும்பு  பகுதியில் அவர்கள்  தங்கியிருந்த வீட்டில் வைத்து பொலிஸ்   புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
கைது செய்யப்பட்ட  குறித்த மூன்று சந்தேக நபர்களும்  பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சனிக்கிழமை  (18)  அழைத்து வரப்பட்டனர்.
 
இதில் இக்ராம் என்ற சந்தேகநபர் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவர்களிடம் தற்போது  மேலதிக விசாரணைகளை  யாழ். பொலிஸார்   மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்தனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
7 + 5 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...