முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரால் பொதுக் கிணறு கையகம்?

RSM
 
வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் அமைந்திருந்த பொதுக்கிணற்றை முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
வவுனியா நகரசபை எல்லைக்குள் கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள வீடோன்றின் முன்பகுதியில் வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த குறித்த பொதுக்கிணற்றை அவ்வீட்டில் குடியிருக்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த நபர், அக்கிணற்றின் மேற்பகுதியை கொங்கிறீற் மூடியினால் மூடி தமது வீட்டின் சொந்தக்கிணறாக பயன்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
இதனால் அப்பகுதி வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் குடிநீரினை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதுடன் அருகில் உள்ள கந்தசுவாமி ஆலயத்திலேயே குடிநீரினை பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் இ. தயாபரன் அவர்களிடம் தொடர்பு கொண்ட போது, "குறித்த கிணறு தொடர்பாக எமக்கும் பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்த கடந்த வெள்ளிக்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டேன். நகரசபையினால் குறித்த காணியின் வரைபடம் மற்றும் ஆவணங்களை இன்று (20) சமர்ப்பிக்குமாறு வீட்டு உரிமையாளருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என அவர் தெரிவித்தார்.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...