இராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க முடிவு

 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுவதற்காக இராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். 11 பேர் அடங்கிய அந்தக் குழுவில் 6 மீனவர்களும் பா.ஜ.க.வினர் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து அவர்கள் அனைவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். தங்கச்சிமடம் மீனவர் ப்ரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தமிழகத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்காக இராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...