BMICH இற்கான ICT தீர்வுகளை வழங்கவுள்ள SLT

Rizwan Segu Mohideen
BMICH இயக்குனர் நாயகமும் பிரதான நிறைவேற்றதிகாரியுமான திரு சுனில் திஸநாயக்கா மற்றும் ஸ்ரீலரெ குழுமத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியான திலீப விஜேசுந்தர.
 
இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பு தொழினுட்ப தீர்வுகள் (ICT) வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), அண்மையில் BMICH உடன் ஒரு உடன்படிக்கையில் இணைந்ததன் மூலம், அந்த மாபெரும் மாநாட்டு மண்டபத்தின் உத்தியோகபூர்வ ICT பங்காளராகியுள்ளது. BMICH இன் சினிமாக்கூடத்தில், அதன் இயக்குனர் நாயகமும் பிரதான நிறைவேற்றதிகாரியுமான சுனில் திஸநாயக்கா மற்றும் ஸ்ரீலரெ குழுமத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியான திலீப விஜேசுந்தர போன்றோரால் இந்த உடன்படிக்கை  உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.
 
இது; உயர்தரமான சர்வதேச உள் நாட்டு நிகழ்வுகளைக் காண்பதற்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர் திரளுகின்ற, விருப்ப இடமாகவுள்ள BMICH இல், முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பு கண்காணிப்பு முறைமையை நிறுவுவதற்கான முயற்சியாகும். இந்த முறைமை மூலம் பெரும் நிகழ்வுகளுக்காக திரளும் பொதுமக்கள், வெளிநாட்டு பார்வையாளர், சர்வதேச முக்கிய நபர்கள் போன்றவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.  
 
23 பெறுவழி முனைகளால்(APIs)  வழங்கப்படும் Wi-Fi பரப்பெல்லையானது; பிரதான மாநாட்டு மற்றும் இசை அரங்கம், கண்காட்சி மற்றும் கூட்ட நிலையம், கொண்டாட்ட அறைகள், நெகு செவன, மிஹிலக மதுர, சர்வதேச ஆராய்ச்சி நிலையம் மற்றும் உணவகங்களை உள்ளடக்கியதாகவிருக்கும். இதனால், BMICH வளாகத்தினுள் நுழையும் எவரும் தங்குதடையற்ற இணைய இணைப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும். அதிவேக அலைவரிசை அளவுடனான இழைய இணைப்புக்களுடன் ஒட்டுமொத்த BMICH வளாகமும் Wi-Fi மயப்படுத்தப்பட்டிருக்கும் என்பதால், கண்காட்சியில் காட்சியரங்க கடைகள் வைத்திருப்பவர்கள் தேவையான FTTH வசதிகளையும் point-to-point links, VPNs மற்றும் இழையம் மூலம் வணிக இணைய வழியையும் பெற்றுக்கொள்ளலாம். 
 
இழைய அடிப்படையிலான அதிவேக அகலப்பட்டை மூலம் அறிமுகப்படுத்தப்படும் ‘fibre to the premises‘ தொழினுட்பம் மூலம், BMICH இற்கு வருகைதரும் எவரும், கட்டணம் செலுத்துவது உட்பட, ஸ்ரீலரெ மற்றும் மொபிடெல் சேவைகளின் முழுமையான அனுபவத்தை பெறலாம். 
 
இலங்கையில் மிகவும் நம்பிக்கையானதும் செலவுப்பயனுறுதி கொண்டதுமான தகவல் தொடர்பு தொழினுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகும். இது நீண்ட காலமாக வணிகங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தர வியாபார முயற்சிகள் போன்றவற்றுக்கு தொடர்பாடல் தீர்வுகளை வழங்கி வருகின்றது. தீர்வுகளைத் தனிப்பயனாக்கும் ஸ்ரீலரெ இன் அதிக தரமுள்ள, உயர்மட்ட தொழினுட்ப சேவைகளின் நெகிழ்வுத்தன்மையானது, BMICH இற்கு வருகை தருவோரது வசதிக்கேற்ப சீராகவும் வழங்கப்படும். 
 
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...