இலங்கை அணிக்கு பெருமை சேர்க்கும் மற்றுமொரு வீரர் மெண்டிஸ்

எந்தவோர் கிரிக்கெட் அணியிலும் மூன்றாவது துடுப்பாட்டக்காரருக்குரிய இடம் மிக முக்கியமானது. 1990களில் அப்போதைய பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் நாலந்தா கல்லூரியின் சார்பில் களமிறங்கி 1985ம் ஆண்டு சிறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற அசங்க குருசிங்க மூன்றாவது துடுப்பாட்ட வீரராக விளையாடினார்.

அசங்க இந்தப் பெரும் பொறுப்பை தன் தோள்மீது சுமந்து விளையாடியதால் அதே பொறுப்பும், பலமும் 1996ம் ஆண்டு இலங்கை அணி 1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்றபோதும் நன்கு புலப்பட்டது. இப்போது அதே மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற இடத்துக்கு மற்றுமொரு ஒப்சேவர்- மொபிடெல் சிறந்த கிரிக்கேட் விருதை 2013ம் ஆண்டு வென்ற குசல் மென்டிஸ் வந்துள்ளார்.

மொரட்டுவை பிரின்ஸ் ஒவ்ப் வேல்ஸ் கல்லூரியின் முன்னாள் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மென்டிஸ் குமார சங்கக்காரவின் ஓய்வின் பின்னர் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்ட பொருத்தமான கிரிக்கெட் வீரர் என்பதற்கு சான்றாக அவருடைய துடுப்பாட்டம் அமைந்திருக்கிறது. அண்மையில், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டிகள், 20 போட்டிகளில் குசல் மென்டிசின் ஆட்டம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவே இருந்தது.

அசங்க குருசிங்க, குமார் சங்கக்கார என்ற இரண்டு வீரர்களைத் தொடர்ந்து இவரும் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்கக்கூடிய சகல தகுதிகளும் உள்ள ஒருவர் என்பதற்கு இவர் தற்போது நடைபெறுகின்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் எடுத்த 194 ஓட்டங்கள் கட்டியம் கூறுகின்றது. அதில் நான்கு சிக்சர்கள்களும், 19 பவுன்டரிகளும் அடங்கும்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்சுக்கு அடித்தளமிட்டது. அவருடைய இந்த பொறுப்பான ஆட்டம்தான் ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக களத்திலிருந்த இவர் 285 பந்துகளுக்கு முகம்கொடுத்தார். இது அவருடைய 15வது டெஸ்ட் போட்டியாகும். அந்த வகையில், தனது 19வது வயதை பூர்த்தி செய்யும் முன்பே டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது கிரிக்கெட் வீரர் இவராவார். இவருக்கு முன்பு அர்ஜுன ரணதுங்கவும், மஹேல ஜயவர்தனமே இந்த பெருமைக்குரியவர்களாக இருந்தனர். 2013ம் ஆண்டு ஒப்சேவர்.

மொபிடெல் கிரிக்கெட் வீரர் விருதை வென்றபோதே இவரிடமிருந்த கிரிக்கெட் துடுப்பாட்ட திறமையை பலர் அடையாளம் கண்டுகொண்டனர். பின்னர், 2015ம் ஆண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இவர் முதன் முதலாக களம்கண்டார்.

போட்டி முடிந்ததும் கருத்து தெரிவித்த மென்டிஸ், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் விளையாடுவது தான் தனது முதல் இலக்கு எனக் கூறினார். கடந்த மாதம் 22 வயதைப் பூர்த்தி செய்த இவர் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில இரண்டு சதம் மற்றும் மூன்று, அரைச்சதமுடன் 1,065 ஓட்டங்களைப் பெற்றார். 22 ஒருநாள் போட்டிகளில் எட்டு அரைச்சதமுடன் 685 ஓட்டங்களும் இவருடைய திறமையின் வெளிப்பாடாகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
5 + 9 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...