சிரிய அமைதிப் பேச்சில் கிளர்ச்சியாளர்கள் இல்லை | தினகரன்

சிரிய அமைதிப் பேச்சில் கிளர்ச்சியாளர்கள் இல்லை

கசகஸ்தான் தலைநகரில் சிரிய அரச தரப்புடனான புதிய சுற்று பேச்சுவார்த்தையில் கிளர்ச்சியாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரச எதிர்ப்பு பிரதிநிதிகளின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்தான பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் இருக்க கிளர்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளார்கள்” என்று குறிப்பிட்ட ஒசாமா அபூ செயித், “யுத்த நிறுத்தம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது” இதற்கான காரணங்களில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு கசகஸ்தான் தலைநகரை நோக்கி பிரதிநிதிகள் வர ஆரம்பித்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்த்ராஹ்னோவ் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். “சந்திப்புக்கான ஏனைய தரப்பினரின் வருகையை உறுதி செய்ய நாம் காத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு மற்றும் அதன் கூட்டணிகள் புதிதாக பிரகடனம் செய்த மார்ச் 7–20 யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பதிலேயே அடுத்த பேச்சுவார்த்தை தங்கி இருப்பதாக குறிப்பிட்ட கிளர்ச்சியாளர்கள் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கும்படி கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர். சிரிய அரசின் நட்பு நாடான ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடாகி இருந்தது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...