பண்டைய மாளிகையை கண்டுபிடித்த ஐ.எஸ் குழு

 

மொசூல் நகரில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழு சன்னதி ஒன்றை அழித்து தோண்டி இருக்கும் சுரங்கப்பாதை மூலம் சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அசீரிய மன்னர் ஒருவரின் மாளிகை தோன்றி இருப்பதாக ஈராக் தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2014 ஆம் ஆண்டு மொசூல் நகரை கைப்பற்றியதை அடுத்து ஐ.எஸ் அங்குள்ள பைபிளில் குறிப்பிடப்படும் யோனாவின் அடக்கஸ்தலத்தை குண்டு வைத்து தகர்த்தது. அந்த அடக்கஸ்தலம் இருந்த பகுதியை தோண்டி சுரங்கப் பாதையை ஏற்பத்தியபோதே இந்த பண்டைய மாளிகை கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் பண்டைய கல்வெட்டுகள் மற்றும் இறகு காளைகள் மற்றும் சீங்கங்களின் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மூ 7 நூற்றாண்டு நவ அசீரிய பேரரசின் எசர்ஹதோன் மன்னரது மாளிகையின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது.

இந்த தொல்பொருள் சின்னங்களை ஐ.எஸ் குழு களவாட முயற்சித்துள்ளது. எனினும் கிழக்கு மொசூலில் இருந்து ஐ.எஸ் குழுவை ஈராக் இராணுவம் கடந்த ஜனவரி மாதம் துரத்தியது. மேற்கு மொசூலில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
14 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...