சத்ரியன்

 

சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன், உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். வெறும் கற்பனைக் கதைகளை மட்டுமே சொல்ல விரும்பாம, மக்களோட அன்றாட வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்ய விரும்புறேன் என்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் ஜி.தியாகராஜன் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்க சத்ரியன் இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைப் பற்றி பரவசமாக பேசுகிறார் பிரபாகரன்.

டிரைலரைப் பார்த்தா கேங்ஸ் ஒஃப் வாசேபூர் வாசனை அடிக்குதே?

உலகமெங்கும் கேங்ஸ்டர் படங்களுக்கு தனி கிரேஸ் இருக்கு. தமிழிலும் நிறைய கேங்ஸ்டர் படங்களை ஓடியன்ஸ் பார்த்திருக்காங்க. இந்தப் படங்களை சினிமா கதை மாதிரி பேண்டஸி கலந்து பண்ணியிருப்பாங்க. ஒரு கேங்ஸ்டரின் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமா அமரன் படத்துலேதான் பதிவு பண்ண முயற்சி பண்ணாங்க. எங்க சத்ரியன்லே ஒரு கேங்ஸ்டரை ரொம்ப நெருக்கமா நின்னு பார்த்து, ரத்தக்களறியான அந்த வாழ்க்கையை அழுத்தமா பதிவு பண்ணியிருக்கேன்.

எந்த சீனிலும் சினிமாத்தனம் கொஞ்சமும் இருக்காது. கேங்ஸ்டர் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும், அதை எப்படி எதிர்கொள்வாங்க என்கிற கோணத்துலேதான் திரைக்கதை நகரும். ஹீரோ விக்ரம் பிரபு எங்கேயுமே தெரிய மாட்டார். குணா என்கிற இளைஞனா மட்டுமே அவரை பார்ப்பீங்க. நம்ம ஊரின் தன்மை, கலாச்சாரம், பழக்கவழக்கம், வாழ்வியல் போன்ற விஷயங்களை படத்துல பர்ஃபெக்டா பதிவு பண்ணியிருக்கேன்.

மென்மையாவே பண்ணிக்கிட்டிருக்கிற விக்ரம் பிரபு கேங்ஸ்டர் கேரக்டருக்கு தாங்குறாரா?

கற்பனையில நான் வடிவமைச்ச குணாவை, சத்ரியன்ல அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. நடிப்புப் பசியுள்ள இளம் ஹீரோக்கள்ல அவரும் ஒருவர். அரிமாநம்பி, இவன் வேற மாதிரி படங்கள்ல அக்‌ஷன் பண்ணியிருந்தாலும், சத்ரியன்ல வரும் குணா கேரக்டர்ல நிறைய வித்தியாசம் காட்டி நடிச்சிருக்கார்.

இந்தப் படம் அவரை ஒரு முழுமையான அக்‌ஷன் ஹீரோவா மக்கள் மனசுல பதிய வைக்கும். அக்‌ஷன்னு சொன்னதுமே, ஸ்கிரீன்ல பறந்து பறந்து அடிப்பார்னு எதிர்பார்க்காதீங்க. கதைக்கு தகுந்த மாதிரி, குணா என்ற அந்த கேரக்டருக்கு நியாயம் செய்யும் விதமா, யதார்த்தம் மீறாத ஆக்‌ஷன் பண்ணியிருக்கார். அவர் கேரியர்ல இந்தப் படம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.

கிராமத்து கதையை விட்டுட்டு, திடீர்னு கேங்ஸ்டர் பக்கம் போயிட்டீங்க?

இது பக்கா சிட்டி கதையில்லை. பொதுவா நான், வேற மொழியில வெளியான சிறந்த கதையம்சமுள்ள படங்களை பார்ப்பேன். அந்த மாதிரி தமிழ்ல பதிவு செய்யணும்னு கொஞ்சம் கூட யோசிச்சதில்லை. நம்ம வாழ்க்கையை, உள்ளது உள்ளபடி இயல்பா பதிவு செய்யணும்னுதான் யோசிப்பேன். கேங்ஸ்டர் கதைகள்லயே வித்தியாசமான திரைக்கதை கொண்ட படமா சத்ரியன் இருக்கும்.

அதனாலதான், முதல்ல வெச்சிருந்த முடிசூடா மன்னன் என்ற டைட்டிலை மாத்தினேன். கிராமத்து கதையை பண்ணாலும் சரி, சிட்டி சப்ஜெக்ட் பண்ணாலும் சரி, அங்க இருக்கிற யதார்த்த மனிதர்களோட வாழ்க்கையைத்தான் பதிவு செய்வேன். அப்பதான் ஆடியன்சுக்கு படம் பிடிக்கும். சுந்தரபாண்டியன் ரிலீசான பிறகு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனா, டைரக்‌ஷன்ல எனக்குன்னு ஒரு தனி அடையாளத்தை உருவாக்க ஆசைப்பட்டேன். அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 7 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...