Touching கூடாது | தினகரன்

Touching கூடாது

 

பாவனாவை கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவத்துக்கு பிறகு நடிகைகள் அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் வெவ்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி உடனடியாக விசாரித்து தீர்வு காண்பதற்காக சேவ் சக்தி என்ற அமைப்பை நடிகை வரலட்சுமி தொடங்கியதுடன் அதற்காக கையெழுத்து இயக்கமும் நடத்தினார். இதில் நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்ற செய்முறை விளக்கத்தை அக்‌ஷய்குமாருடன் இணைந்து நடித்துக்காட்டி அதனை இணைய தள பக்கத்தில் வெளியிட்டார் டாப்ஸி. தற்போது பெண்களுக்கு மற்றொரு அறிவுரையை டுவிட்டர் பக்கத்தில் வழங்கி உள்ளார்.

‘உலகிலேயே மக்கள் தொகையில் 2வது அதிகபட்ச அளவில் பெண்கள் உள்ளனர். ஆண் பெண் சம உரிமை உண்டு. அதேசமயம் கியூவில் (வரிசை) நிற்கும்போது மற்றவரது உடல் நம்மீது டச் செய்யாமல் விலகி இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது’ என்றார் டாப்ஸி.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...